×

மக்களவை தேர்தலையொட்டி திருவண்ணாமலையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.. 100 சதவீதம் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை, மார்ச் 22: திருவண்ணாமலையில், மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று தொடங்கி வைத்தார் மக்களை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலையில் வரும் மக்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று அறிவொளி பூங்கா அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர சைக்கிள், மற்றும் மோட்டார் வாகனங்கள் மூலம் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை தொடங்கி வைத்த கலெக்டர் மூன்று சக்கர சைக்கிளை தானே இயக்கிக்கொண்டு மாற்றுத்திறனாளிகளுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்தின் போது, தேர்தலில் அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீத வாக்கு பதிவு செய்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பாதகையை ஏந்தி சென்றனர்.

அறிவொளி பூங்கா அருகே ஊர்வலம் நிறைவடைந்ததையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களித்தனர். அப்போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், ‘வரும் மக்களை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளி வாக்களர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் தனியாக நிறமிட்டு குறிப்பிடப்பட்டிருக்கும்’ என இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Collector ,election ,Thiruvannamalai ,Lok Sabha ,Voters ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...