×

கூத்தாடி அம்மன் கோயில் பூத்தட்டு விழா

சிங்கம்புணரி, மார்ச் 21: சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோயில் பூத்தட்டு விழா நேற்று நடைபெற்றது. சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி பூத்தட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து சந்திவீரன் கூடம், பெரிய கடைவீதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு மலரபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு கோயில் காப்பு கட்டப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். தினமும் இரவில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். வரும் 26ம் தேதி பால்குடம், அக்கினி சட்டி, நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கூத்தாடி அம்மன் கோயில் உறவின் முறையாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Koodathe Amman Temple Bhoothathu Ceremony ,
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்