×

பள்ளி சுவர்களில் ஓவியங்கள் வரைய ரூ.5 லட்சம் ஒதுக்கீடு

சிவகங்கை, மார்ச் 21: அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி சுவர்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்கள் வரைய நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்ததாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் குழந்தைகளின் கல்வி உரிமை, பெண் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தன்சுத்தம், சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே சுவர் சித்திரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களிலும் 155 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான நிதி ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 155 பள்ளிகளில் 400 சுவர் சித்திரங்கள் 8 ஆயிரத்து 800 சதுர அடியில் வரைதல் வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாதிரி படங்களில் உள்ள வண்ணங்கள் மற்றும் வார்த்தைகளில் எவ்வித மாற்றங்களும் இன்றி வரைதல் வேண்டும். வண்ணச்சுவர் சித்திரங்கள் வரைதல் பணியினை உடனடியாக தொடங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பள்ளி தலைமயாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்