×

கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாததால் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டாத சுயேட்சை வேட்பாளர்கள்

தஞ்சை, மார்ச் 21: கஜா புயல் பாதிப்பில் இருந்து மீளாததால் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி என்று 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் தஞ்சை, திருவையாறு சட்டமன்ற தொகுதி தவிர மற்ற 4 சட்டமன்ற தொகுதி கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். இதிலிருந்து இன்று வரை மீளகூட முடியாத நிலையில் உள்ளனர். ஒரு சில பகுதிகளில் வாங்கிய கடனை கூட கட்ட முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.25 ஆயிரம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள் அதற்கான ஆதாரங்களை காண்பித்து டெபாசிட் தொகையில் பாதியை செலுத்த வேண்டும். ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நேரத்தில் தேர்தல் தேவையா என்று கேட்பதால் அரசியல் கட்சியினரை தவிர சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை. கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளுடன் போட்டி போட்டு கொண்டு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தேதி அறிவிக்கப்பட்டு 2 நாட்களாகியும் அதிக ஆர்வம் காட்டப்படவில்லை.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...