×

மக்களவை, சட்டப்பேரவை திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

கூடுவாஞ்சேரி, மார்ச் 21: மக்களவை திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில், ஏராளமான கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, வேட்பாளரை அறிமுகம் செய்தார்.

இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோரை முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிமுகம் செய்து வைத்தார். இதில், கூட்டணி கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சியினர் திமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களையும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். திருக்கழுக்குன்றத்தில், வரும் 25ம் தேதி வேட்பாளர்கள் செல்வம், இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து சிறப்புரையாற்ற வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பேரூர் செயலாளர் வக்கில் ஜி.கே.லோகநாதன் நன்றி கூறினார்.

Tags : Lok Sabha ,Legislative Assembly DMK ,meeting ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...