×

பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை இலங்கை அகதிகள் 2 பேர் கைது

சென்னை, மார்ச் 21: வளசரவாக்கம், தேவிகுப்பம் பிரதான சாலை, லட்சுமி நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (58). சாப்ட்வேர் நிறுவன ஊழியர். கடந்த வாரம்  பத்மநாபன், குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பினார். அப்போது அவரது வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேப் பகுதியை சேர்ந்த சக்கரபாணி நகரில் பதுங்கியிருந்த மதுரையை சேர்ந்த சிவராஜன் (எ) ராஜன் (43) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் கூட்டாளி திவாகர் (எ) தருன் (33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, பிடிபட்ட இருவரும் இலங்கை தமிழர்கள். மதுரையில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் தங்கி வசித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன், இலங்கைக்கு கள்ளதோணியில் கள்ளநோட்டு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். பின்னர் சென்னை மதுரவாயலில் மீன் கடை நடத்தினர்.
அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் வளசரவாக்கம், சக்கரபாணி நகரில் உள்ள விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து மதுரவாயல், வளசரவாக்கம், அடையாறு உள்பட பல்வேறு இடங்களில் கொள்ளையடித்துள்ளனர் என்றனர்.

Tags : refugees ,persons ,houses ,robbery ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...