×

முகப்பேரில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து : பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் மேற்கு 2வது பிரதான சாலையில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான 2 அடுக்குமாடி கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் ஓட்டல், பழக்கடை, சூப்பர்மார்க்கெட், அழகு நிலையம் உள்பட 7 கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் வணிக வளாகத்தில நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மின்கசிவு ஏற்பட்டு திடீர் விபத்து ஏற்பட்டது. இதில், வணிக வளாகத்தில் உள்ள 7 கடைகளும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கோயம்பேடு, அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினர்.

இருப்பினும், 7 கடைகளும் தீயில் முற்றிலும் எரிந்தது நாசமாயின். இதில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணி அளவில் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இதுகுறித்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Tags : Fire accident ,premises ,
× RELATED மூணாறில் தீ விபத்து; 10 வீடுகள் எரிந்து...