×

கன்வேயர் பெல்ட் அறுந்து அரசு சிமெண்ட் ஆலையில் தீவிபத்து

அரியலூர், மார்ச் 21: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் கிராமத்தில் பழமையான அரசு சிமென்ட் ஆலை உள்ளது. இந்நிலையில் ரூ.500 கோடிக்கு மேல் புதிதாக நவீன முறையில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தனியார் ஒப்பந்தக்காரர்களால் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நிலக்கரி மற்றும் சுண்ணாம்பு கற்கள் கன்வேயர் பெல்ட் மூலமாக உலைகலனுக்கு கொண்டு செல்வதற்கான சோதனையோட்டம் நடந்தது.
அப்போது பெல்ட் உராய்வு காரணமாக கன்வேயர் பெல்ட்டில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேலும் தீ பராவமல் அணைத்தனர். இதனால் பல லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் தப்பின. இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : state cement factory ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...