×

பறக்கும் படையினர் வாகன சோதனை தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

அரியலூர்,மார்ச்21: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 அமலுக்கு வந்துள்ளதையொட்டி, அரியலூர் மாவட்டம், குன்னம் வழியாக செல்லும் வாகனங்களை பறக்கும் படையினர் (நிலை-1) மற்றும் காவல்துறையினர் சோதனை செய்ததை, சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் துர்கா தத், பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.மேலும், குன்னம் வழியாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் துரிதமாக சோதனை செய்து, வாகனத்தில் செல்பவர்களுக்கு இடையூறாக இல்லாமல் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று வீதம் 18 பறக்கும் படைக்குழுக்களும், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் சோதனை செய்து வருவதை சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் துர்கா தத், பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார்கள்.மேலும், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் தொலைபேசி. 8925096095 எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.இந்தஆய்வின்போது, வட்ட வழங்கல் அலுவலர் பழனிசெல்வன் மற்றும் காவல் துறையினர், அலுவலர்கள் உட்பட பலர்உடனிருந்தனர்.

Tags : visitor ,visitor examination ,test drive ,
× RELATED டெல்லியில் இருந்து தலைமை தேர்தல்...