×

கோமாரி தடுப்பூசி முகாம்

உடுமலை,மார்ச்21: திருப்பூர் மாவட்டத்தில் 96 ஆயிரம் கால்நடைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கோடை காலம் தற்போது துவங்கி விட்ட நிலையில் கால்நடைகள் கேமாரி நோய் தாக்குதலில் உயிரிழப்பதை தவிர்ப்பதற்காக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  கடந்த 15ம் தேதி துவங்கிய இம்முகாமில் கால்நடை மருத்துவர்,உதவி மருத்துவர்கள்,கால்நடை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் முன்கூட்டியே கால்நடைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு அதன்பின்னர் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடத்தில் தடுப்பூசி முகாம் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர். இதையடுத்து காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மருத்துவர் குழு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். இம்முகாமானது ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பிட்ட கிராமங்களில் தடுப்பூசி போடாத கால்நடைகளை அடுத்த கிராமத்தில் நடைபெறும் முகாமின் போது அழைத்து வந்து போட்டுக்கொள்ளலாம் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Tags : Komari ,vaccination camp ,
× RELATED முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்