பறக்கும் படை நடவடிக்கை நீலகிரி மக்களவை தொகுதியில் இதுவரை ரூ.1.54 கோடி பறிமுதல்

ஊட்டி, மார்ச் 21: நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் இதுவரை ரூ.1 கோடியே 54 லட்சத்து 02 ஆயிரத்து 950 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்.18ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் நீலகிாி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூா் மற்றும் கூடலூா் சட்டமன்ற தொகுதிகளுக்கு பறக்கும் படை, நிலை மற்றும் நகரும் கண்காணிப்பு குழுக்கள் என 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.   கடந்த 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்த வாகன சோதனையில், நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 51 பேரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடியே 54 லட்சத்து 02 ஆயிரத்து 950 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் சமர்பித்த 12 பேருக்கு இதுவரை ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 510 திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: