கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

திருப்பூர்,  மார்ச் 21: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் திருப்பூர்  மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே உள்ளே  செல்லும் வகையில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 18 ம் தேதி மக்களவை தேர்தல்  மற்றும் 18 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. திருப்பூர்  மக்களவை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது.  வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்  வேட்பாளர்கள்  உட்பட ஆதரவாளர்கள்  நூற்றுக்கணக்கான வாகனங்களில் வருகின்றனர். அனைவரும் கலெக்டர் அலுவலக  வளாகத்தினுள் சென்று பல்வேறு இடங்களில் தங்களுடைய வாகனங்களை தாறுமாறாக  நிறுத்துகின்றனர்.  இதனால் தேர்தல் பணி அதிகாரிகளின் வாகனங்கள் மாவட்ட  கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

இதை  தவிர்க்கும் விதமாக மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு பகுதியில் உள்ள இரு  நுழைவு பகுதியிலும் மாநகர போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். வேட்பு  மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களின் வாகனங்களை உள்ளே  செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே உள்ளே  செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தினுள்   தனியார் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.அரசு துறை உயர்  அதிகாரிகளின் வாகனங்கள் மட்டும்  உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.   மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு பகுதியில் 20க்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: