வாக்கு எண்ணும் மையம் மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருப்பூர்,  மார்ச் 21: திருப்பூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை  மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.திருப்பூர்  மக்களவை தொகுதியில்  பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, திருப்பூர்  வடக்கு, தெற்கு ஆகிய 6 சட்டபை தொகுதிகளை  உள்ளடக்கியது. ஆயிரத்து 704  வாக்குசாவடி மையங்களில் பதிவாகும் வாக்குகள் திருப்பூர்-பல்லடம் ரோடு  எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் எண்ணப்பட உள்ளது.  இதற்கான முன்னேற்பாடு பணிகள் பொதுப்பணித்துறை, காவல் துறை, வருவாய்த்துறை,  உள்ளாட்சித்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை  கலெக்டர் பழனிச்சாமி நேற்று சென்று ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மைய்ய  வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று  மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்  குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  ஆய்வின் போது மாநகர  போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், எஸ்.பி. கயல்விழி, துணை கமிஷனர் உமா,  டி.ஆர்.ஒ. சுகுமார்,  மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்  ரமேஷ், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், தேர்தல் தாசில்தார் முருகதாஸ்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: