×

3 வாக்குச்சாவடி பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம்

வால்பாறை, மார்ச் 21:   வால்பாறை வட்டாட்சியர் வெங்கடாச்சலம் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் நடராஜ் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் வால்பாறை பகுதியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையம்  சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறை தாலுக்காவில் கடந்த 2014 மக்களவை தேர்தலில் 61 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆண்டு 7  வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைத்து மொத்தம் 68 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இவை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகில் உள்ளதால் வனவிலங்குகள் அடிக்கடி வாக்குச்சாவடி பகுதிக்கு வரும் நிலை உள்ளது.
 இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தை, கட்டெருமை மற்றும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிகடி வருவதால்,  மானாம்பள்ளி, சின்னக்கல்லார் மற்றும் சக்தி எஸ்டேட்களில் உள்ள 3 வாக்குச்சாவடிகள் மையங்கள் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என கண்டறியப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பன்னிமேடு, இஞ் சிப்பாறை, மாணிக்கா, குரங்குமுடி, கருமலை, காஞ்சமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் உள்ள பள்ளிகட்டிடங்களை யானைகள் உடைப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே வனவிலங்குகள் நிறைந்த பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளூர் தேர்தல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Wilderness places ,polling areas ,
× RELATED 3 வாக்குச்சாவடி பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம்