×

வண்ண மலர் நாற்று நடவு பணி நிறைவு

ஊட்டி,  மார்ச் 21:   ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 25 ஆயிரம் தொட்டிகளில்  நாற்று நடவு பணிகள் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மழையை எதிர்பார்த்து ஊழியர்கள்  காத்திருக்கின்றனர்.  சுற்றுலா தலங்கள் நிறைந்த ஊட்டிக்கு நாள் தோறும்  பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்த ேபாதிலும், கோைட சீசனான  மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவது  வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பல்ேவறு  நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இதில், முக்கியமானது  மலர் கண்காட்சி ஆகும். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் இந்த மலர்  கண்காட்சியை காண லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும்  சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் பல லட்சம் மலர்  செடிகள் நடவு செய்யப்படும்.

 இந்த செடிகளில் பல வகையான வண்ணங்களில்  மலர்கள் பூத்து குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது  வழக்கம். இம்முறையும் வரும் மே மாதம் 17ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை  ஐந்து நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது. இதற்காக தற்போது பூங்காவை தயார்  செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.   இந்நிலையில், பூங்காவில் 25  ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவு பணிகள் நிறைவடைந்தன. தற்போது, அந்த  செடிகளுக்கு உரமிடும் பணிகள் மற்றும் தண்ணீர் ஊற்றும் பணி நடந்து வருகிறது.  எனினும், மழை பெய்தால் மட்டுமே செடிகள் நன்கு வளரும் என்பதால், ஊழியர்கள்  மழையை எதிர்பார்த்துள்ளனர். ஆண்டு ேதாறும் மார்ச் மாதம் இரண்டாம்  வாரத்திற்குள் ஓரிரு நாட்கள் மழை ெபய்யும். இந்த மழை அனைத்து பூங்காவில்  உள்ள செடிகள் தழைத்து வளர உதவும். ஆனால், இது வரை மழை பெய்யவில்லை.



Tags :
× RELATED கண்ணாடி மாளிகையில் தூலிப், லில்லியம் மலர் அலங்காரம்