×

தேர்தல் செலவின புகார் அளிக்க தொலைபேசி எண் வெளியீடு

ஊட்டி, மார்ச் 21:  தேர்தல் ெசலவினம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.18ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு ஓட்டு பெறுவதற்காக பொருட்கள், பணம் போன்றவைகள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை செய்து வருகின்றனர். பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் உதவி செலவின பார்வையாளர்கள் ஆகியோர் பாரபட்சமின்றி தங்களது பணிகளை சிறப்பாக மேற்ெகாள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இதனிடையே தேர்தல் ெசலவினம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க விரும்பினால், ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் 1950 மற்றும் 1800-425-0034 என்ற கட்டணமில்லா ெதாலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

   மேலும் நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு என தேர்தல் ஆணைத்தால் நியமிக்கப்பட்ட செலவின கண்காணிப்பு பார்வையாளர் கிப்கென் - 8300076811, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா - 9444166000, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் - 94450000912 ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ஊட்டி ஆர்.டி.ஒ., சுேரஷ் - 9445461804, கூடலூர் ஆர்.டி.ஒ., ராஜ்குமார் - 9445000437, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் - 9445000438 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி