பள்ளியில் அடிப்படை வசதி செய்துதர கோரி முற்றுகை

திருப்பூர், மார்ச் 21:   திருப்பூர் கேத்தம்பாளையத்திலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர். திருப்பூர், பிச்சம்பாளையத்தையடுத்த கேத்தம்பாளையம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை.இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்திலுள்ள மரத்தடியில் அமர்ந்து படிக்ககூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல முறை மாவட்ட கல்வி அதிகாரியிடமும், வடக்கு தொகுதி எம்.எல்.வி.,டமும் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை அங்கிருந்த பெட்டியில் போட்டு சென்றனர்.

Related Stories: