சிறார் மீதான குற்றம் தடுக்க ஆலோசனை

கோவை, மார்ச் 21: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறார் மற்றும் பெண்கள் மீதான குற்றம் தடுக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு கண்காணிப்பு குழு எஸ்.பி சோனல் சந்திரா, கோவை, திருப்பூர் நகர், ேகாவை, திருப்பூர், ஈேராடு, நீலகிரி மாவட்ட மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள், சைல்ட் லைன் அமைப்பினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.  இதில் சிறார், பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்கு சிறார், பெண்கள் மீதான வன் கொடுமை, துன்புறுத்தல், பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் வந்தால் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வகையில் விசாரணை இருக்கவேண்டும். குற்றவாளிகள் வீடியோ, போட்டோ எடுத்து வைத்து மிரட்டினால், ஆயுதங்களை காட்டி மிரட்டினால் கடும் நடவடிக்கையில் வழக்கு பதிவு செய்யவேண்டும் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: