மேட்டுப்பாளையம் அருகே கிரஷர் உரிமையாளரிடம் ரூ.3 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல்

மேட்டுப்பாளையம், மார்ச் 21:  மேட்டுப்பாளையம் அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் காரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - அன்னூர் ரோட்டில் தென்திருப்பதி நால்ரோடு பிரிவில் இருந்து காரமடை செல்லும் வழியில் உள்ள  சின்னதொட்டிபாளையம் என்னும் கிராமத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் எஸ்ஐ குணசேகரன் மற்றும் குழுவினர்   நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில்  பயணித்த காரமடை அருகே பெள்ளாதியை சேர்ந்த கிரஷர் உரிமையாளர் பிரீத்தி என்பவர் தனது கைப்பையில் ரூ3லட்சத்து 26 ஆயிரத்து 500 வைத்திருந்தார் .உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர் பணம் வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் தாசில்தாருமான புனிதாவிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: