ஓட்டு மெஷின் வாகனங்களில் ஜி.பி.எஸ் ஆன்லைனில் கண்காணிக்க உத்தரவு

கோவை, மார்ச் 21: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக 64 ஆயிரம் ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. தேர்தலை முன்னிட்டு ஓட்டு சாவடி மையங்கள் தேர்தல் அதிகாரிகள் கட்டுபாட்டில் விடப்படவுள்ளது.

 பணம் பட்டுவாடா தடுப்பு நடவடிக்கை, அதிகாரிகள் சோதனைகளில் முறைகேடு, விதிமுறை மீறல் தடுக்க ஆன்லைன் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஜி.பி.எஸ் கருவிகளை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை வாகனங்களில் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அளவில் 750 பறக்கும் படை வாகனங்கள், 750 நிலையான கண்காணிப்பு படை வாகனங்களில் இந்த ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறது.  மேலும் 6 ஆயிரம் ஓட்டு மெஷின் ெகாண்டு செல்லும் லாரி மற்றும் டெம்போக்களில் ஜி.பி.எஸ் அமைக்கப்படவுள்ளது. ஒரு லாரி மூலமாக 20 முதல் 25 ஓட்டு சாவடிகளில் இருந்து ஓட்டு மெஷின் மற்றும் கட்டுபாட்டு கருவிகள் பெறப்பட்டு அவை ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்து செல்லப்படவுள்ளது. செல்லும் வழியில் வாகனங்கள் நிறுத்துவதை கண்காணிக்க, ஓட்டு மெஷின்கள் முறையாக வாகனங்களில் ஏற்றுவதை தெரிந்த கொள்ள இந்த ஜி.பி.எஸ் கருவி உதவிகரமாக இருக்கும்.  மாவட்ட கட்டுப்பாட்டு அறை, மாநில கட்டுப்பாட்டு அறைகளில் இந்த கருவிகளின் இயக்கத்தை அதிகாரிகள் கண்காணிக்கவுள்ளனர்.

Related Stories: