ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம்

கோவை, மார்ச் 21: ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை பொது தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் வழிக்காட்டுதலின் பேரில், தமிழகம், புதுச்சேரி வருமான வரித்துறை (புலானய்வு பிரிவு) இயக்குனர் அலுவலகத்தின் சார்பில் 24 மணி நேர செயல்பாட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள், தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் நோக்கத்தில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களால் பெரும் தொகையினை பதுக்கி வைத்தல், பணம் வழங்குதல் உள்ளிட்ட புகார்களை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இலவச தொலைபேசி எண் 1800-425-6669, வாட்ஸ் அப் எண் 94454-67707, பேக்ஸ் எண் 044-28262357 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் அல்லது itcontrol.chn@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியும் புகார் தெரிவிக்கலாம் என கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: