×

கல்யாண் ஜூவ்வலர்ஸில் நகை கட்டணம் முன்செலுத்தும் திட்டம்

கோவை, மார்ச் 21:  கோவை கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கான கட்டணத்தை முன் செலுத்தும் திட்டத்தின் மூலம் 25 சதவீதம் வருவாய் வளர்ச்சியை கல்யாண் ஜூவல்லர்ஸ் இலக்காக வைத்துள்ளது. சமீபத்தில் இந்திய அரசு முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களை தடை செய்யும் சட்டம் 2019-ஐ பிரகனடப்படுத்தி உள்ளது. எந்த கட்டுப்பாட்டு அதிகாரத்துக்கும் உட்படாமல், நகையை வாங்குபவர்களிடம் இருந்து முன்கூட்டியே பணத்தை பெறும் நிறுவனங்களை குறி வைத்து இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜேஷ் கல்யாணராமன் கூறியதாவது: அணிகலன் துறையை முறைப்படுத்த நீண்ட கால முயற்சி காரணமாக இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நகைகளுக்கான கட்டணத்தை முன் செலுத்துவதில் தனியுரிமை நிறுவனங்களுக்கும், கூட்டு நிறுவனங்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை சரிசெய்துள்ளது. இதனால், இனி இத்துறையில் அனைத்து நிறுவனங்களும் சமம். பொதுத்துறை நிறுவனம் என்ற வகையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நகைக்கான கட்டணத்தை முன்செலுத்தும் முறைப்படுத்தப்பட்டவையாக உள்ளது. இத்திட்டங்கள் பெருநிறுவனத்துறை அமைச்சகத்தின் முறையான ஒப்புதல் பெற்றுள்ளது. கம்பெனிகளின் சட்டவிதிகளின் படி பதிவாளரிடம் முறையான வரி விவரங்களை தாக்கல் செய்து வருகிறோம். நாடு முழுவதும் 102 ஷோரூம்கள் மூலம் 650க்கும் மேற்பட்ட கல்யாண் ஸ்டோர்கள் மூலமாகவும் எங்களின் தன்வர்ஷா மற்றும் அக்ஷயா நகை வாங்குவதற்கான முன் செலுத்தும் திட்டத்தின் மூலம் மிகச்சிறந்த வளர்ச்சியை அடைய முடியும் என நம்புகிறோம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் 11 மாதங்களுக்கு சுலபதவணைகளில் கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர், கட்டிய பணத்திற்கான நகைகளை கம்பெனிகள் சட்டத்துக்கு உட்பட்ட சில சலுகைகளுடன் வாங்கிக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kalyan ,
× RELATED பவண் கல்யாண் ரசிகரின் திருமண...