மதிமுக அலுவலகம் வந்த திமுக வேட்பாளர்

கோவை, மார்ச்.21: கோவை ம.தி.மு.க அலுவலகத்திற்கு வந்த பொள்ளாச்சி மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் அங்குள்ள கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்.  கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட ம.தி.மு.க  அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியின் தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார்.. அவருக்கு மதிமுக., நிர்வாகிகள் சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ம.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார், துணை செயலாளர் கணபதி செல்வராஜ், உயர்நிலை குழு உறுப்பினர் ஆடிட்டர்.அர்ஜூனராஜ்,  மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், மற்றும் பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: