ஆத்தூர் வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர தேரோட்ட விழா

ஆத்தூர், மார்ச் 21:  ஆத்தூர் அருகே வடசென்னிமலையில் பக்தர்களுக்கு கேட்ட வரம் அருளும் குழந்தை வடிவமான தெய்வம் பாலசுப்ரமணிய சுவாமி, தெற்கே குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடி கொண்டிருப்பான் என்பதற்கு ஏற்ப, தமது திருவிளையாடல் மூலம் மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலமான வடசென்னிமலை என்ற சிறப்பு பெயர் கொண்ட குன்றின் மீது எழுந்தருளி, வேண்டுவோர்க்கு வேண்டுவன எல்லாம் அருள் பாலித்து வருகிறார். இவ்வளவு பெருமை கொண்ட பாலசுப்ரமணிய சுவாமி கோயில், ஆகமவிதிப்படி திருக்குடமுழக்கு நடத்திடும் பொருட்டு ராஜகோபுரம் மற்றும் மூலவர் பாலசுப்ரமணிய சுவாமி தண்டாயுதபாணி சுவாமி, உற்சவர் சன்னதிகள் படிவழி பாதையில் உள்ள இடும்பன் சன்னதி மலையடிவாரத்தில் உள்ள  வரசித்தி விநாயகர் சன்னதி,  கருமாரியம்மன் சன்னதிகள் அனைத்து தோரண வாயில்கள் ஆகியவற்றின், புனராவர்த்தன திருப்பணிகள் செய்தும் வர்ணம் தீட்டியும் மலைபாதை தார்சாலை மலைபடி பாதைகளில் பராமரிப்பு மற்றும் இதர பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட திருப்பணிகள், திருமுருகன் திருவருளாலும் கொடையாளர்கள் உதவியோடும் முடிக்கப் பெற்று மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஈசனுக்கே பாடம் புகட்டிய பாலமுருக கடவுள் எழுத்தருளியுள்ள இந்த கோயிலில், வழிபாடுகள் நடத்தினால், எல்லாம் வெற்றி என்பதை பலர் தங்களின் வாழ்நாள் கண்ட உண்மையாகும்.

இந்த கோயிலின் கும்பாபிஷேக விழாவின் போது மழைமேகம் வானில் இருக்கும். விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள இந்த சுற்றுவட்டாரத்தை நல்ல வளமான பூமியாக மாற்ற, முருகனின்அருள் என்னாலும் கிடைக்கும். நெல், வாழை, பாக்கு தென்னை என பயிர்கள் வளர வளம் சேர்க்கும் நிகழ்வாக கும்பாபிஷேகம் விழா அமைந்தது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள பாலசுப்ரமணி சுவாமிகள், பாலகனாக அருள் பாவித்து இந்த பகுதி மக்களை மகிழ்வித்தான் என்பது வரலாற்று உண்மையாகும். வடசென்னிமலை பாலகனாக முருகன் திருவிளையாடல்களை நடத்திய திருத்தலமாகும். இந்த ேகாயில் வேண்டுதல் வைத்து வழிப்பாட்டால், குழந்தைபேறு திருமணம் கைகூடல் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் இல்லங்களில் நடக்கும் என்பது உண்மையாகும். இத்தகைய பெருமைமிக்க கோயிலில் நடைபெறயுள்ள பங்குனி உத்திர தேரோட்ட விழாவில் கலந்து கொண்டு, சுவாமி பாலசுப்ரமணிய அருள் பெற்றிட அனைவரும் திரளாக வர வேண்டும்.

Related Stories: