×

பாக்குமட்டை தொழில் தொடங்கி மாதம் ₹1 லட்சம் சம்பாதிக்கலாம்

சேலம், மார்ச் 21: சேலம் களரம்பட்டியில்  கணேஷ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பாக்குமட்டை இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் மணிகண்டன், வாசு ஆகியோர் கூறியதாவது,
பாக்குமட்டையில் இருந்து பொருட்களை தயாரிக்கும் ஹைட்ராலிக் இயந்திரங்களை தயாரித்து வருகிறோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டதை அடுத்து பாக்குமட்டை தொழிலுக்கு தற்போது பிரகாசமான வாய்ப்பு உள்ளது.   பாக்கு மட்டையில் இருந்து பாக்கு தட்டு, உணவு பாக்ஸ், ஸ்பூன், டீ டம்ளர், சூப் கப் உள்பட ஏராளமான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மேலும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் ஆண்கள், பெண்கள், மகளிர் சுய உதவி குழுவினர் பாக்கு மட்டை தொழில் தொடங்கி, மாதம் ₹1 லட்சம் வரை சம்பாதிக்கலாம். பாக்கு மட்டையில் இருந்து பொருட்களை தயாரிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து மிஷின்களை விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் பாக்கு மட்டை இயந்திரங்களில் ஒரு யூனிட் ஆறு அச்சு (டை) மிஷின் கொண்டதாக இருக்கும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பலன் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.  

Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்