×

பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம்,மார்ச் 21: நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடு நடந்தது. நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனு£ர் கிராமத்தில் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தனி சன்னதியில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பது பூவனூர் கிராமத்திற்கு பெருமையளிக்கிறது. இக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று  மன கஷ்டம் உள்ளவர்கள்,கோயில் எதிரே உள்ள குளத்தில் குளித்து திருமணம் தடை,குழந்தை பாக்கியம் வேண்டுவோர்,எலிக்கடி,விஷக்கடி உள்ளோர் வேண்டுதலின் பேரில் 28 நெய் விளக்குகள் ஏற்றி ஒரு விளக்கு அம்மனுக்குவைத்து மீதம் 27விளக்குகளை கோயில் சன்னதியை சுற்றிவரும் போது ஒரு ஒரு விளக்காக ஏற்றினால் வேண்டுதல் நிறைவேறும் என்ற ஐதீகம் உண்டு.

இக்கோயிலில் புஸ்பவனேஸ்வரர்,கற்பகவள்ளி, ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சாமிகள் தனி சன்னதியில் உள்ளது.அகஸ்தியர் வழிபட்ட தலமாகவும், தல விருச்சமாக பலா மரம் உள்ளது.நேற்று பவுர்ணமியன்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை மற்றும் நெய்விளக்கேற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.

Tags : Chamundeswari Amman ,
× RELATED சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு...