×

மன்னார்குடி பலசரக்கு கடையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

மன்னார்குடி, மார்ச்21: மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொ ) உத்தரவின் பேரில் சிறப்பு கண் காணிப்பு  குழு பலசரக்கு கடை ஒன்றிலிருந்து அரசால் தடை செய்யப் பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை  பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்  கடை உரிமையாளருக்கு ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.  சுற்றுச் சுழலை மாசுப்படுத்தும், நீலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக பாதிக்கும் ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறியும் 14 வகையான அபாய கரமான பிளாஸ்டிக் பொருட்களை தமிழகம் முழுவதும் ஐனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்து சட்டம் இயற்றியது. மேலும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக  விற்பனை செய்வது , கிடங்குகளில் சேமித்து வைப்பது, கடைகளின் முலம் பொது மக்களுக்கு  விற்பனை செய்வது போன்றசெயல்களில் ஈடுபடுவோருக்கு பறிமுதல் செய்யப் படும் பொருள்களுக்கு ஏற்ப  அபதாரம் விதிப்பதோடு  நீதிமன்ற நடவடிக்கையும்  மேற்கொள்ள படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொ ) இளங்கோவன் உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சந்திரசேகர் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரபாகரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கள்  அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுவினர் மன்னார்குடி பெரிய கடை தெருவில் இயங் கும் பிரபலமான பலசரக்கு கடையில் சோதனை செய்து கடையில் இருந்த  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ 50 ஆயிரம் மதிப்பிலான நெகிழி பைகள், குவளைகள், உறிஞ்சு குழாய்கள், நெய்யாத பைகள் மற்றும் கரண்டி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் பலசரக்கு கடையின் உரிமையாளருக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Mannargudi ,grocery store ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...