×

தேமுதிக செயல்வீரர் கூட்டம்

நீடாமங்கலம்,மார்ச்21: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ஒன்றிய, நகர தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார்.நகர செயலாளர் தங்ககோபி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சண்முகராஜ்,மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட துணைச் செயலாளர்கள் முகமதுமுகைதீன்,வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகுழு அமைப்பது,நடைபெற உள்ள தஞ்சை பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Tags : DEMO Activist ,meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...