×

நீடாமங்கலம் அருகே கப்பிகள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

நீடாமங்கலம்,மார்ச்21: நீடாமங்கலம் அருகில் உள்ள களத்தூர் மேல்கரையிலிருந்து  வெண்ணவாசல் வரையிலான வெண்ணாறு தென்கரை சாலை கப்பிகள் பெயர்ந்து மோசமான சாலையால்  வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இதனை  சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா கொரடாச்சேரி அருகில் உள்ள கிளரியம் பாலம் களத்தூர் மேல்கரையிலிருந்து வெண்ணவாசல் வரையிலான வெண்ணாறு தென்கரையில் கப்பி சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கப்பிகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தவழியாக நீடாமங்கலம்,அனுமந்தபுரம், பழங்களத்தூர், களத்தூர் மேல்கரை,வெண்ணவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து இந்த சாலை வழியாக அத்திக்கடை, பொதக்குடி, லெட்சுமாங்குடி ,கூத்தாநல்லூர் பகுதிகளுக்கு வாகனங்களில் அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.மேலும் கொரடாச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர்.  வங்கிகள், கடைகளுக்கும் பெரும்பாலான மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை மோசமாக இருப்பதால் மாலை நேரங்களில் மின்வசதி இல்லாததாலும் அடிக்கடி வாகனங்கள் பஞ்சராகி  வான ஓட்டிகள் மிகவும் அவதி பட்டு செல்கின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை நேரில் பார்வையிட்டு பொது மக்கள் நலன்கருதி விரைவில் சீரமைக்க வேண்டும் என்றனர்.

Tags : Vehicle drivers ,cavalry road ,Neidamangalam ,
× RELATED நாமக்கல்லில் வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்