×

பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே அமைக்கப்பட்ட புதிய அகல பாதையில் விரைவில் ரயில்கள் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மன்னார்குடி, மார்ச். 21: திருவாரூர் - காரைக்குடி இடையேயான மீட்டர் கேஜ் பாதையில் கடந்த  2012 ம் ஆண்டு மார்ச் 15 ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. அகலப் பாதையாக மாற்றும் முதற்கட்ட பணிகள் 72.23 கி.மீ பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே நிறைவடைந்து. கடந்த நிதியாண்டு இறுதியில் (மார்ச் 2018) ரயில்கள் ஒடத் துவங்கியது. திருவாரூர் - காரைக்குடி , திருத்துறைப்பூண்டி - அகஸ்த்தியம்பள்ளி, மன்னார் குடி- பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் அகலப்பைதை திட்டங் களுக்கு என மொத்தமாக கடந்த 2018-19 நிதியாண்டுக்கு ரூ240 கோடியும், நட ப்பு 2019-20 நிதியாண்டுக்கு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டது. இதனால் இத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளான 74 கி.மீ பட்டுக்கோட்டை- திருவா ரூர் அகலப்பாதை பணிகளை நடப்பு நிதியாண்டு க்குள் முடிக்க ரயில்வே திட்டமிட்டது. இதனால் அதிராம்பட்டிணம், தில்லை விளாகம், திருத்துறைப்பூண்டி,  திரு நெல்லிக்காவல் ஊர்களில் இரண்டு மூன்று  ரயில்கள் நின்று செல்லும் பெரிய ரயில் நிலையங்கள், முத்துப்பேட்டை, ஆலத்தம்பாடி மாவூர் ரோடு ஊர்களில்  சிறிய ரயில் நிலையங்கள் வேகமாக கட்டி முடிக்கப்பட்டன. ஜல்லி கற்கள் பரப்பி தண்டவாளங்கள் போடும் பணிகளும் நிறைவடைந்து விட்டன.

சிக்னல் இணைப்பு, குடிநீர் குழாய் பொருத்துதல், மற்றும் சிறிய வேலைகள்  இறுதி கட்டமாக நடந்து வருகின்றன.தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வரும் மார்ச் 26 முதல் 29 வரை இந்த அகலப்பாதை பணிகளை ஆய்வு மேற் கொள்ள இருக்கிறார். அவரிடம் சான்று பெற்று நடப்பு நிதியாண்டுக்குள் ( வரும் மார்ச் 31 க்குள் ) ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து இருக்கிறது. இதனால் திருவாரூர்- காரைக்குடி இடையே சரக்கு ரயிலோ அல்ல பயணிகள் ரயிலோ இந்த மாத இறுதிக்குள் இயக்கப்படலாம் என தெரிகிறது. அதே நேரம் முதற்கட்ட பணிகள் முடிந்த காரைக்குடி - பட்டுக்கோட்டை பாதையில் கடந்த ஒரு ஆண்டாக முறையாக ரயில்கள் இயக்கப்படவில்லை. ரயில் நிலையங்கள், நிரந்தரமாக பணியாளர்கள் இல்லாமல் மூடியே கிடக் கின்றன. அத்திட்டத்தின் தொடர்ச்சியான பட்டுக்கோட்டை- திருவாரூர் அகலப்பாதை பணிகள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடைந்தாலும் முறையாக பயணிகள் ரயில்களை நிர்வாகம் உடனே இயக்குமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில  துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில்,  ரயில்கள் இயக்கும் நோக்கத்தில் அந்தப் பகுதியில் நிரந்தரமாக பணியாற்ற விரும்பும் ஊழியர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று அதற்கான மாற்றல் உத்த ரவுகளை நிர்வாகம் ஏற்கனவே  வழங்கி விட்டது. மேலும் நடப்பு 2018-19  நிதியாண்டு 6058, வரும் 2019-20 நிதியாண்டு 5940, அடுத்து வரும் 2020-21 நிதி யாண்டு 6534 என மொத்தம் 18 ஆயிரத்து 532 ரயில் பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. எனவே  ரயில் பெட்டிகள் தட்டுப்பாடுகளும் படிப்படியாக நீங்கும். இந்த பாதையில் தேவைக்கு ஏற்ப ரயில்கள் நிச்சயம் இயங்கும் என நம்பிக்கையுடன் கூறினார்.

Tags : Pattukottai ,Tiruvarur ,
× RELATED பட்டுக்கோட்டையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி