கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி

திருக்கனூர், மார்ச் 21: திருக்கனூர் முத்து மாரியம்மன் கோயிலில் மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கருவறை அருகே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் பீடம் அமைத்து, அதில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் கோயிலுக்குள் புகுந்து, அந்த உண்டியலை பெயர்த்து, கீழே தள்ளி பூட்டை உடைத்து, கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். பூட்டை உடைக்க முடியாததால் வெல்டிங் மிஷின் உதவியுடன் திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் உண்டியலை திறக்க முடியவில்லை. இதனால் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

நேற்று காலை கோயில் கணக்காளர் வந்தபோது, இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து தொகுதி எம்எல்ஏ டிபிஆர்.செல்வம், கோயில் நிர்வாகி கண்ணன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து பார்வையிட்டு, திருக்கனூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது கொள்ளையர்கள் வெல்டிங் மிஷின் மூலம் உண்டியலை திறக்க முயன்றபோது, தீப்பொறி பட்டு 2 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நோட்டுகள் கருகி இருந்தது தெரியவந்தது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: