×

கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 21:  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷ் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் குமரகுரு எம்எல்ஏ, பாமக மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ், பாமக மாவட்ட செயலாளர் சரவணன், பாஜக மாவட்ட தலைவர் தாமோதரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேமுதிக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். கள்ளக்குறிச்சி எம்பி காமராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் காசாம்புபூமாலை, சுபா, அழகுவேல்பாபு, பார்த்தசாரதி, தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் கோவிமுருகன் மற்றும் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Dialogue candidate ,block ,Kallakurichi ,
× RELATED குடியுரிமை சட்டத்திற்கு எதிராக...