கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் தென்காசி தொகுதியில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என பேட்டி

கடையநல்லூர், மார்ச் 21:  கடையநல்லூர் பகுதியில் கூட்டணி கட்சியினர், அனைத்து சமுதாயத்தினரை சந்தித்து திமுக வேட்பாளர் தனுஷ்குமார் ஆதரவு திரட்டினார். 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ்குமார், நேற்று கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கிலிபட்டி, கடையநல்லூர், காசிதர்மம், இடைகால் பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அனைத்து சமுதாய தலைவர்கள், முஸ்லிம் ஜமாஅத்தார்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், அவைத்தலைவர் முத்துப்பாண்டி, பொதுக்குழு காசிதர்மம் துரை, ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, நகர செயலாளர் சேகனா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகச்சாமி, துணை அமைப்பாளர்கள் ஹக்கீம், சரவணக்குமார், முத்துவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செங்கோட்டை வக்கீல் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர்கள் சுப்பிரமணியன், பொய்கை மூக்கையா, தொமுச ஜெயக்குமார், தங்கையா, செல்லத்துரை, பிள்ளையார்பாண்டியன், திருமலைக்குமார், செல்வராஜ், முருகன், கடையநல்லூர் நகர திமுக நிர்வாகிகள் சங்கரன், பால்துரை, அப்துல் வகாப், மஸ்தான், மக்தூம், ராமபுலி, வானுவர்அலி, ஜமீம்ஷாகிபு, மைதீன், ஹரிதாஸ், பெருமாள், துரை, ரகுமத்துல்லா, ராமையா, மாரியப்பன், காளிமுத்து, சுடலைமுத்து, காங்கிரஸ் சமுத்திரம், மதிமுக முருகன், முஸ்லிம் லீக் லத்தீப், இக்பால், ஹனீபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி பாக்கியநாதன், சிபிஐ முத்துசாமி, சிபிஎம் ராஜசேகர், தமிழ்புலிகள் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்நாடு தவ்ஹீத் நெல்லை மேற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜலாலுதீன், செயலாளர் சுலைமான், பொருளாளர் செய்யது மசூது, அஹமது, குறிச்சி சுலைமான் ஆகியோரிடம் தனுஷ்குமார் ஆதரவு திரட்டினார். மேலும் காசிதர்மம் மற்றும் இடைகாலில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செங்கோட்டையில் திமுக வேட்பாளர் தனுஷ்குமார், நிருபர்களிடம் கூறியதாவது: விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், இந்த தொகுதி மக்களின் பிரச்னைகளை அறிவேன். இந்த தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த வாய்ப்பில், மக்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்றம் செல்வேன். அப்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது எம்பியாக இருப்பவரை, இதுவரை இப்பகுதி மக்கள் யாரும் பார்த்தது இல்லை. விவசாயிகளின் கஷ்டத்ைத உணர்ந்தவன். அவர்களுக்கான சலுகைகளை பெற்று தருவேன். அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன். தென்காசி தனி மாவட்ட கோரிக்கையை திமுக தலைவரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றுவேன். நான், இந்த ெதாகுதிக்கு இறக்குமதி வேட்பாளர் அல்ல. தொகுதியை சேர்ந்தவன். கூட்டணி கட்சியினர் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன், என்றார். பேட்டியின்போது திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Related Stories: