×

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர், மார்ச் 21: விருத்தாசலம் அருகே உள்ள எடசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன். மாற்றுத்திறனாளியான இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது விவசாய பணிகளுக்காக கடன் வாங்க அங்குள்ள கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றபோது அதன் ஊழியர் ஒருவர் அமரேசனை அவமானப்படுத்தி தாக்கியதாக ெதரிகிறது. இதுதொடர்பாக, மங்கலம்பேட்டை காவல் நிலையம், காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை.
எனவே, மாற்றுத்திறனாளியை தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கத்தினர் பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று காலை  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் சந்தோஷ் தலைமை வகி்தார். பொதுச்செயலாளர் சண்முகம் கண்டன உரையாற்றினார். பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் ஆறுமுகம், ஜெயபாலன், சக்கரை உள்ளிட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது