×

சேத்தியாத்தோப்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சேத்தியாத்தோப்பு, மார்ச் 21: சேத்தியாத்தோப்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அனைவரும் வாக்களிப்போம், நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு என்பதனை வலியுறுத்தும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கியது. பேரணியை மண்டல அலுவலர் ஆறுமுகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி, சேத்தியாத்தோப்பு கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் புஷ்பராஜ், பார்த்திபன்,  கிராம நிர்வாக உதவியாளர் அன்புதாஸ், சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், கல்வியாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக ராஜிவ் காந்தி சிலை, சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையம் பகுதி சென்று பின்பு பள்ளியை வந்தடைந்தது. மேலும் நமது இலக்கு நூறு சதவீத வாக்குப்பதிவு என்பதனை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது  மாணவர்கள் ஒருங்கிணைந்து மனித சங்கிலி பேரணியையும் நடத்தினர்.

Tags : Voter awareness rally ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி