×

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயகுமாருக்கு உற்சாக வரவேற்பு

விளாத்திகுளம், மார்ச் 21: விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளர் ஏ.சி.ஜெயகுமாருக்கு திமுக  தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்லில் திமுக சார்பில் ஏ.சி.ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று விளாத்திகுளம் வந்த அவருக்கு, வைப்பாற்று பாலத்தின் அருகே திமுகவினர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து, பேருந்து நிலையம் முன்பு தொண்டர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.

வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, வேட்பாளர் ஏ.சி.ஜெயக்குமாரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள வேட்பாளர் ஜெயக்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், நகர செயலாளர் வேலுச்சாமி,பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜன், புதுராஜன் உட்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Vilathikulam block ,Jayakumar ,DMK ,
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...