×

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

தூத்துக்குடி, மார்ச் 21: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட அணிகளுக்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டம் கோவங்காடு கிராமத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. முகாமில் பங்கேற்ற நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் குளம் தூர்வாருதல், கண்மாய் சீரமைப்பு, நீர்நிலை மேலான்மை விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடத்தினர். இதில் சிறப்பு கருத்துரையாளர்களாக மனநல மருத்துவர் சிவசைலம், மனநல ஆலோசகர் ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞர் சுபாஷினி, சமூக ஆர்வலர் ஜெகஜீவன், கர்னல் சுந்தரம், நாட்டுநலப்பணித்திட்ட பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம், காமராஜ் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர். நிறைவு விழாவிற்கு காமராஜ் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட தலைவருமான நாகராஜன் முன்னிலை வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் நாட்டுநலப்பணித்திட்ட மண்டல இயக்குநர் முனைவர் சாமுவேல் செல்லையா கலந்து கொண்டு, முகாமில் பங்கேற்ற காமராஜ் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி, வெங்கடசாமிநாயுடு கல்லூரி, பிஷப் கால்டுவெல் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைச் சார்ந்த 100 நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். காசிராஜன் வாழ்த்துரை வழங்கினார். கோவங்காடு முன்னாள் பஞ்சாயத்துதலைவர் விஜயசங்கர், பேராசிரியர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அணி 54, 56ன் அதிகாரிகள் தேவராஜ், பொன்னுத்தாய் ஆகியோர் செய்திருந்தனர். வணிகவியல் துறை மாணவர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Tags : Closing ceremony ,National Welfare Project Camp ,
× RELATED நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா