×

காரைக்காலில் கால்பந்து போட்டி

காரைக்கால், மார்ச் 21:  காரைக்கால் விநாய காமிஷன் மருத்துவ கல்லூரியில், வருடாந்திர விளையாட்டுப் போட்டியாக கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது.
முதல் போட்டியாக கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை, கல்லூரி  புல முதல்வர் டாக்டர் அம்புஜம் வீரர்களுக்கு கைகொடுத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, குழு போட்டிகளாக கைபந்து, எறிபந்து, கிரிக்கெட், பேஸ்கெட் பால் போட்டிகளும், தனிநபர் போட்டியாக ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ரிலே ரேஸ், மாரத்தான், டென்னிஸ், இறகுபந்து உள்ளிட்ட போட்டிகளும் இன்று (21ம்தேதி) முதல் நடைபெறவுள்ளதாக, கல்லூரி முதுநிலை உடற்கல்வி இயக்குனர் ஜான்சன்ராஜ் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Football match ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...