×

மயிலாடுதுறை தொகுதியில் தேர்தல் குறித்த புகாருக்கு செல்போன் எண் அறிமுகம்

நாகை, மார்ச் 21: மயலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் குறித்து புகாருக்கு செல்போன் எண் அறிமுகம்செய்துள்ளனர். நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்களுக்கு புகார்  ஏதுமிருப்பின் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் செலவினப் பார்வையாளர் சங்கய்முகர்ஜியின் 6382619474 என்ற எண்ணிலும், தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் சதீசை 6360141044 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Introduction ,election ,constituency ,Mayiladuthurai ,
× RELATED கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில்...