×

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்

காரைக்கால், மார்ச் 21: காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் பிரமோத்சவ விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் பிரமோத்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. விழா முடிவடையும் வரை தினமும் காலை பஞ்சமூர்ர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது. 9ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (20ம்தேதி) தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ கீதா ஆனந்தன், கோயில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம்,  செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, தேர், காரைக்கால் பாரதியார் வீதி, கென்னடியார்வீதி, மாதாகோயில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, மாலையில் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. 10ம் நாள் நிகழ்ச்சியாக இன்று (21ம்தேதி) காரைக்கால் அம்மையார் குளம் எனும் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரியும், 12ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக 24ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. நாகை:நாகை அபீதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீஸ்வரர் சுவாமி கோயிலில்   வருடாந்திர பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 12ம் தேதி கொடி ஏற்றமும், 16ம் தேதி வசந்தன் உற்சவமும் நடைபெற்றது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. கீழ வீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக மீண்டும் கீழ வீதியில் உள்ள நிலையடிக்கு தேர் வந்து  சேர்ந்தது. நுற்றுக்கணக்கான பக்தர்கள்  வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், உபயதாரர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Karikal Kailasanathar Temple ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...