×

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே கணக்கில் வராத ₹1.60 லட்சம் சிக்கியது

வேலூர், மார்ச் 21: வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத ₹1.60 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் பறக்கும் படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான குழுவினர் நேற்று வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே காட்பாடியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் வந்த காரில் சோதனை செய்தனர். அதில் காரின் பின் இருக்கையில் இருந்த கைப்பையில் இருந்து ₹1 லட்சம் பணத்தை கண்டுபிடித்தனர். அந்த பணம் தொடர்பாக கேட்டபோது விஷாரத்தில் உள்ள ஓட்டலுக்கு மளிகை பொருட்கள் வாங்க பணம் கொண்டு செல்வதாக கிறிஸ்டோபர் கூறினார். அதைத்தொடர்ந்து முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து, கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலை வழியாக வந்த சலவன்பேட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது காரை சோதனை செய்தனர். அதில், அவரிடமிருந்து ₹60 ஆயிரத்தை கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், மின் உபகரண பொருட்கள் வாங்க சென்னைக்கு செல்வதாக கூறினார். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். திடீர் சோதனையில் மொத்தமாக சிக்கிய ₹1.60 லட்சம் பணத்தை வேலூர் தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைத்தனர். பின்னர், கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் அரசு கருவூலத்தில் சேர்த்தனர்.

Tags : Vellore Green Circle ,
× RELATED பியூட்டி பார்லரில் பெண் பணியாளர்களுக்கு இடையே கைகலப்பு 7 பேர் மீது வழக்கு