×

வேலூர் அருகே செங்கல் சூளையில் 2 குடும்பங்களை சேர்ந்த கொத்தடிமைகள் 10 ேபர் மீட்பு சப்-கலெக்டர் நடவடிக்கை

வேலூர், மார்ச் 21: வேலூர் அருகே செங்கல் சூளைகளில் 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேரை சப்-கலெக்டர் மெகராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மீட்டனர். வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள செங்கல் சூளையில் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக சப்-கலெக்டர் மெகராஜூக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் கணியம்பாடி அடுத்த நெல்வாய் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில், ஆந்திர மாநிலம் பங்காருபாளையம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(39) மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பொன்னையில் வசிக்கும் பிரகாஷின் சகோதரி ரமணி என்பவர், ரமேஷிடம் ₹60 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால் அதில் சிறிது தொகையை பிரகாஷிடம் கொடுத்துவிட்டு அவர்களை செங்கல் சூளையில் விற்றுவிட்டு சென்றுள்ளார். பிரகாஷ் குடும்பத்தினர் வாரத்திற்கு ₹500 மட்டுமே கூலி பெற்று கொத்தடிமைகளாக பணியாற்றியது தெரியவந்தது. அதேபோல் கணியம்பாடி அடுத்த நெல்வாய் அருகே மகாலிங்கம் என்பவரது ெசங்கல் சூளையில் ஆற்காடு அடுத்த வி.கே.மாங்காடு பகுதியை சேர்ந்த குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் கொத்தடிமைகளாக இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்பவர் செங்கல் சூளை உரிமையாளர் மகாலிங்கம் என்பவரிடம் ₹40 ஆயிரம் பெற்றுக்கொண்டு செங்கல் சூளையில் வேலை செய்ய அனுப்பியது தெரிய வந்தது. இவர்களுக்கும் வாரத்திற்கு ₹500 மட்டுமே கூலி வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கொத்தடிமைகளாக இருந்த பிரகாஷ்(39), அவரது மனைவி அமுல்(29), மகள்கள் பிரியா(10), பேபி(7), மகாலட்சுமி (8மாத குழந்தை), மகன் கார்த்தி(3) ஆகிய 6 பேரும், குமார்(35), மனைவி மாரியம்மாள்(26), மகள் ராஜேஸ்வரி(12), மகன் வாசுதேவன்(11) ஆகிய 10 பேரை மீட்டனர். மீட்கப்பட்ட 10 பேரையும் வேலூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டதற்கான சான்று, நிதி உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Tags : families ,bridges ,Vellore ,rescue sub-collector ,
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...