×

மாதனூர் ஒன்றியத்தில் ₹1.25 கோடியிலான பால பணிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் தரமற்ற கட்டுமானம் என புகார்

ஆம்பூர், மார்ச் 21: மாதனூர் ஒன்றியத்தில் ₹1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பால பணி தரமற்றதாக உள்ளதாக கூறி கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்தில் அய்யனூர் மற்றும் நாச்சார்குப்பம் இடையே சாலை அமைக்க அந்த மக்கள் கோரி வந்தனர். தினமும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட ஊரக வளர்ச்சி நிதியின் கீழ் ₹1.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு அந்த சாலையின் இடையே பாலம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகின்றன.

மேம்பாலத்திற்கான தூண் கட்டப்பட்டுள்ள நிலையில் தரமற்ற வகையில் இரும்புகம்பிகள் தெரியும் வகையில் கட்டப்படுவதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு கட்டுமான பணியை நிறுத்த கோரினர். இதை தொடர்ந்து அப்பகுதியில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. உறுதியாக கட்டப்பட வேண்டிய மேம்பாலம் தரமற்ற முறையில் கட்டப்படுகிறது. இவ்வாறு கட்டினால் சிறிது நாளிலேயே இந்த மேம்பாலம் இடிந்து விழும். அவ்வாறு இடிந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேம்பாலத்தை தரமாக கட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridges ,
× RELATED செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக...