அவிநாசி, மார்ச் 20: நீலகிரி மக்களவை தொகுதி திமுக., வேட்பாளர் ஆ.ராசா இன்று (20ம் தேதி) அவிநாசி வருகிறார்.இதுகுறித்து அவிநாசி ஒன்றிய திமுக., பொறுப்பாளர் சிவப்பிரகாஷ் அறிக்கை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக., வேட்பாளர் ஆ.ராசா இன்று மாலை அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே வர உள்ளார். அவருக்கு அவிநாசி ஒன்றிய கழகம் சார்பிலும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அவிநாசி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட நிர்வாகிகளும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும், ஒன்றிய கழக நிர்வாகிகளும், கழக துணை அமைப்புகளின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்களும், துணை அமைப்பாளர்களும், நிர்வாகிகளும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.