புகையிலை, மதுபானம் விற்ற 7 பேர் கைது

திருப்பூர், மார்ச் 20: திருப்பூர் மாநகர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை, மதுபானம் விற்பனை செய்த 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 115 புகையிலை பாக்கெட்கள் மற்றும் 59 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக புகையிலை மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் காலேஜ் ரோட்டில் கிருஷ்ணா மார்க்கெட்டிங்,  எஸ்.வி. காலனி, சஞ்சய் மளிகை கடை, கனகராஜ் மளிகை கடை, எம்.ஜி.ஆர். நகர் நித்யா பெட்டி கடை அதிரடி சோதனை நடத்தினர். இதில் கிஷோர்(24), மணிகண்டன்(34), ஜீவானந்தம்(50), சங்கர்(29) ஆகியோர் சட்ட விரோதமாக புகையிலைகள் விறப்னை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 115 புகையிலை பாக்கெட்களை  பறிமுதல் செய்தனர்.

அதேேபால், திருப்பூர் மங்கலம் ரோடு, திருப்பூர்- பல்லடம் ரோடு தமிழ்நாடு தியேட்டர் அருகில், கல்லாங்காடு ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முருகேசன்(28), ராஜபாண்டி(30), மதியழகன்(32) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 59 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: