பாய்லருக்கு நிலக்கரி தூள் பயன்பாடு சுற்றுசூழல் மாசுபட்டால் மக்கள் அவதி

திருப்பூர், மார்ச் 20:  திருப்பூர்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள், பிளிச்சிங், வாசிங், ஸ்டீம் ஆகியவற்றில் நிலக்கரி கட்டிகள், கடினமான விறகுகளை பயன்படுத்துவதால் காற்று மாசுபடுவதுடன், வெப்ப காற்று உஷ்ணம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சாய ஆலைகளில் உள்ள பாய்லரில் உற்பத்தியாகும் நீராவியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளனர்.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாய கழிவு நீரை சுத்திகரிக்க 18 ெபாது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை  பாய்லர் மூலம் சூடு செய்யப்பட்டு பல்வேறு நிலைக்கு பயன்படுத்துகின்றனர். பாய்லர், அரிசி அரவை ஆலைகள், செங்கல் சூளைகள் ஆகியவற்றிக்கு விறகு மற்றும் நிலக்கரி  அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.  திருப்பூர், தாராபுரம், காங்கேயம், பல்லடம் ஆகிய பகுதிகளிலுள்ள பாய்லர், செங்கல் சூளை ஆகியவற்றிக்கு தினமும் 100க்கு மேற்பட்ட லாரிகளில் தென் மாவட்டங்களிலிருந்து விரகு வருகிறது.

தமிழகத்தில் நீர் நிலைகள், தனியார் இடங்களிலுள்ள சீமை கருவேலம் மரங்களை அழிக்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் சீமை கருவேலாம் மரங்களை அழிப்பதில் தீவிரம் காட்டினர். தமிழகம் முழுவதும் 50 சதம் சீமை கருவேலம் மரங்களை அகற்றப்பட்டுள்ளது. இதனால், நிலக்கரி துாள் குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் புகையும், உஷ்ணமும்  அதிகளவு வெளியேறுகிறது.  இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி., உதவியுடன், நீராவியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை திருப்பூர் சாய ஆலைகள் துவங்க தயாராகி வருகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகளில், துணிக்கு சாயமேற்ற நீராவி பயன்படுத்தப்படுகிறது. பாய்லர்களை சூடேற்றி, அதிக அழுத்தத்தில் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது.

 சாய ஆலை பாய்லர்களில் உருவாகும் அழுத்தம் மிக்க நீராவியை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். இதனால், சாய ஆலைகள், பிளிச்சிங், வாசிங், ஸ்டீம் காலரிங் ஆகியவற்றில் நிலக்கரியை உபயோகிக்கும் பட்சத்தில் திருப்பூர் பகுதி முழுவதும் காற்று மாசுபடுவதுடன், உஷ்ண காற்று வெளியேறி பொது மக்களுக்கு அதிக புழுக்கம் ஏற்பட்டு தோல் வியாதிகள் உட்பட பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.  இயற்கைக்கு மாற்றாக தொழில் நிறுவனங்கள் ஈடுபடும்பட்சத்தில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். காற்று மாசுபடாமல், உஷ்ணக்காற்று வெளியேறாமல் இருக்கும் வகையில் தொழிற்சாலைகள் இருக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Related Stories: