×

மாவோயிஸ்ட் நடமாட்டம் சிஆா்பிஎப்போலீஸ் பாதுகாப்பு


ஊட்டி, மார்ச் 20: நீலகிரி மக்களவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் தேர்தல் ெதாடர்பான விவரங்களை அறிந்து கொள்ள தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தேர்தல் தகவல் அறிவிப்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.நீலகிரி மாவட்டம் கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழி பேசும் மக்கள் உள்ளனர். இந்நிலையில், மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்த தேர்தல் தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமின்றி, மலையாள மொழியிலும் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில்  நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு மூன்று மொழிகளில் தேர்தல் தகவல் அறிவிப்பு வெளியிட்டு, அதனை அலுவலக தகவல் பலகையிலும் ஒட்டினார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது : நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட அனைத்து தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வைக்கப்பட்டுள்ளது.இம்முறை நீலகிரி மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊட்டி ஆர்டிஓ., அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்யலாம். சாலைகள் மற்றும் நடைபாதைகளில் கூட்டங்கள் நடத்தக்
கூடாது.

கூட்டம் நடக்கும் இடத்தில் மட்டுமே கொடிகள், பேனர்கள் கட்டப்பட வேண்டும். இதற்கு தற்காலிக அனுமதி பெற வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் 100 மீட்டருக்கு முன் வாகனங்களை நிறுத்த வேண்டும். மேலும், வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டும் வர வேண்டும். தேர்தலில் முறைகேடு நடக்காமல் இருக்க 108 ஆம்புலன்ஸ், தனியார் ஆம்புலென்ஸ், அமரர் ஊர்தி போன்ற வாகனங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதியில் மட்டும் 78 வாக்குச்சாவடிகள் பதட்டமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், மாநில எல்லைகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள நிலையில், எல்லையில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். தேர்தல் செலவின பார்வையாளராக கிப்ெஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மும்ைம வருமான வரித்துறை கமிஷனராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Maoist ,
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்