×

வீட்டுமனை பட்டா வழங்காததால் கருங்கல்பாளையம் மக்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு

ஈரோடு, மார்ச் 20:   ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 15 ஆண்டாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதில் பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.   ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம் பகுதி, அரசிளங்கோ வீதி, தொப்பையர் வீதி, மரப்பாலம் மெயின்ரோடு, கிழக்கு சின்னமாரியம்மன் கோயில் வீதி, குமணன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசித்து வரும் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளும் உள்ளது. மேலும் மாநகராட்சிக்கு வரியும் செலுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 15 ஆண்டாக பட்டா கேட்டு அமைச்சர்கள், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  இதுதொடர்பாக கருங்கல்பாளையம் அரசு பள்ளியில் நடந்த விழாவில் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். ஆனால் உறுதிமொழி கொடுக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால் தற்போது நடக்கவுள்ள தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதிகாரிகளின் அலட்சிய போக்கே இதற்கு காரணம். இந்த பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.




Tags : election ,Karungalapalai ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்