தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்கள் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

ஈரோடு,  மார்ச். 20:  ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி தேசிய பசுமை ஆணைய  தீர்ப்பாயத்தின் ஆணைப்படி மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாடு  கெளுத்தி மீன் வகைகளை உற்பத்தி செய்தல் மற்றும் வளர்த்தால் முற்றிலும்  அழிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும் மீன் பண்ணைகளில் கட்லா,  ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை, வெள்ளி கெண்டை மற்றும் கண்ணாடி  கெண்டை மீன்கள் போன்ற இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளர்த்து பயன்  பெறலாம்.  மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு ஈரோடு அடுத்த திண்டல்  வீரப்பம்பாளையம் பிரிவில் உள்ள மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக  கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: