கல்வராயன் மலைப்பகுதியில் சாலையோர பூங்காவை சீரமைக்க கோரிக்கை

ஆத்தூர், மார்ச் 20: கல்வராயன் மலைப்பகுதியில் நெடுஞ்சாலை துறையினரால் அமைக்கப்பட்ட சாலையோர பூங்கா புதர்மண்டிய நிலையில் கிடப்பதால் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்காவில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் கருமந்துறை, கலக்காம்பாடி, குன்னூர், பகுடுப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல பாப்பநாயக்கன்பட்டியிலிருந்து மலைப்பாதை அமைக்கப்பட்டு, அதில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் இளைப்பாறி செல்லும் வகையில், நெடுஞ்சாலைத்துறையினரால் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படாததால், முற்றிலும் சிதைந்து புதர் மண்டி ஆட்கள் நுழைய முடியாத நிலையில் உள்ளது. இந்த பூங்காவை முறையாக பராமரிக்க நெடுஞ்சாலைத்துறையினருக்கு பலமுறை மலைவாழ் மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, சாலையோர பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் வேண்கோள் விடுத்துள்ளனர்.

Related Stories: